கஞ்சாவை தொலைத்தவர்கள் தொடர்பு கொள்ளவும்- அசாம் போலீசாரின் நூதன அறிவிப்பு

590 கிலோ கஞ்சாவை தொலைத்துவிட்டீர்களா கவலைப்பட வேண்டாம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்ற விதத்தில் நகைச்சுவையாக அசாம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 | 

அசாம் மாநிலத்தில் உள்ள சகோலியா வாகன சோதனை சாவடி அருகே நீண்ட நேரம் நின்றிருந்த லாரியை போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அந்த லாரியில் 50 மூட்டைகளில் 590 கிலோ கஞ்சா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் நூதன முறையில் கஞ்சா கைப்பற்றப்பட்டதை தெரிவித்துள்ளனர்.

அதன் படி அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில், 590 கிலே கஞ்சாவையும், லாரியையும் யாராவது சகோலியா சோதனை சாவடி அருகே தொலைத்து விட்டீர்களா? கவலைப்படாதீர்கள், எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று அவர்கள் அதில் பதிவிட்டுள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP