பிரியங்காவை சூர்ப்பனகையுடன் ஒப்பிட்ட பாஜக எம்எல்ஏ

பிரியங்காவை சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பேசிய பாஜக எம்எல்ஏவால் உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 | 

பிரியங்காவை சூர்ப்பனகையுடன் ஒப்பிட்ட பாஜக எம்எல்ஏ

பிரியங்காவை சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பேசிய பாஜக எம்எல்ஏவால் உத்தரப்பிரதேசத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்கா காந்திக்கு முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அதாவது உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளராக ப்ரியங்கா நியமிக்கப்பட்டுள்ளார். 

அதே உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பாஜக பொதுச் செயலாளராக இருக்கும்  எம்.எல்.ஏ. சுரேந்திர சிங்கிடம், பிரியங்கா காந்தி அரசியல் வருகையை குறித்து கேள்வி எழுப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அவர், ராமர் மற்றும் இராவணனுக்கு இடையே போருக்கு தொடங்க இருந்த போது, ராவணன் தனது சகோதரியான சூர்ப்பனகை அனுப்பினான். ஆனாலும் ராமர் வெற்றி பெற்றார். 

அதேபோல வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி ராமராகவும், ராகுல் காந்தி ராவணனாகவும், அவரது சகோதரி பிரியங்கா  ராவணின் தங்கை சூர்ப்பனகையாக உள்ளனர். 

ஆகவே ராமாயணத்தில் எப்படி இலங்கையை ராமர் வென்றாரோ? அதேபோல் வரும் தேர்தலில் ராமராகிய மோடி ராவணனையும் (ராகுல்காந்தி) சூர்ப்பனகையும் (பிரியங்கா) வீழ்த்தி வெற்றி பெறுவார் என உறுதியாக நம்புகிறேன் எனக் கூறியுள்ளார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP