அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் சமைப்பது தவறில்லை: இமார்த்தி தேவி

அங்கன்வாடி குழந்தைகளுக்கு கழிவறையில் உணவு சமைப்பதில் தவறில்லை என அமைச்சர் இமார்த்தி தேவி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மத்தியப்பிரதேச மாநிலம் கரோராவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு கழிவறையில் உணவு சமைப்பதாகவும், பாத்திரங்கள் வைக்கப்பட்டிருப்பதாகவும்  புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக செய்தி தொலைகாட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அமைச்சர்  இமார்த்தி தேவி கழிவறையில் சமைப்பது தவறில்லை என தெரிவித்திருக்கிறார்

நமது வீட்டில் குளியலறையுடன் கழிவறை இருப்பதால் வீட்டிற்கு வரும் உறவினர்கள் வீட்டில் சாப்பிட மறுப்பார்களா என கேள்வி எழுப்பிய அவர், குளியலறையில் பாத்திரங்கள் வைக்கலாம் என்றும், நாம் நமது வீடுகளில் பயன்படுத்தப்படாத பாத்திரங்களை அடுக்கி வைத்திருக்கிறோமே என்றும் குறிப்பிட்டார். 

மேலும், அங்கன் வாடி மையத்தில் கழிவறைக்கும் சமைக்கும் இடத்திற்கும் இடைவெளி உள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP