விஷவாயு தாக்கி 7 பேர் பலி!

குஜராத் மாநிலத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
 | 

விஷவாயு தாக்கி 7 பேர் பலி!

குஜராத் மாநிலத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற 4 தொழிலாளர்கள் உள்பட 7 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள பர்திகுயி என்ற கிராமத்தில் உள்ள ஒரு உணவு விடுதியில் இருந்த கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இன்று காலை 4 தொழிலாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் ஒருவர் பின் ஒருவராக இறங்கிய போது அவர்களை விஷவாயு தாக்கியது. இதில் 4 பேரும் மயக்கமடைந்தனர்.

இதைப்பார்த்த அருகில் இருந்த 3 பேர் தொட்டியில் இருந்த 4 பேரை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்களையும் விஷவாயு தாக்கியது.

இதில் தொட்டியில் இறங்கிய 7 பேரும் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP