காஷ்மீர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், குப்வாராவில் மேலும் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர்.
 | 

காஷ்மீர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரின் ஷோபியான் பகுதியில் 3 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில், குப்வாராவில் மேலும் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து அப்பகுதிகளில் பொதுமக்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

ஷோபியான் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே போல, குப்வாராவின் யாரூ கிராமத்தில் உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் துவங்கினர். 

இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில், ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். பலியான தீவிரவாதிகளில் இரண்டு பேர் ஷோபியான் மாவட்டத்தையும் ஒருவர் புல்வாமாவையும் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இரண்டு பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடத்தொடங்கினர். போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி வன்முறையாளர்களை கலைந்து செல்ல வைத்தனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP