Logo

கோவாவில் 2 எம்எல்ஏகள் பல்டி- பாஜகவின் பலம் அதிகரிப்பு

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், பாஜகவின் பேச்சுவார்த்தைகள் மூலம் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் கடந்த மார்ச்-20ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.
 | 

கோவாவில் 2 எம்எல்ஏகள் பல்டி- பாஜகவின் பலம் அதிகரிப்பு

கோவா முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கர் மறைந்த நிலையில், அடுத்த முதல்வராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற குழப்பம் ஏற்பட்டு வந்த நிலையில், பாஜகவின் தந்திரமான பேச்சுவார்த்தைகள் மூலம் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்புடன் கடந்த மார்ச்-20ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் புதிய முதல்வராக பிரமோத் சாவந்த் பதவியேற்றார்.

இந்த சம்பவம் நிகழ்ந்து முடிந்த ஒரு சில நாட்களிலே மீண்டும் நள்ளிரவில் ஒரு அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 3 உறுப்பினர்களை கொண்ட மஹாராஷ்ட்ரவாதி கோமந்தக் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. இதில் இருந்து 2 உறுப்பினர்கள் கொண்ட அணி தற்போது தங்களை பாஜகவில் இணைந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, 36 உறுப்பினர்களை கொண்ட கோவா சட்டமன்றத்தில் பாஜகவிற்கு 12 உறுப்பினர்கள் இருந்த நிலையில், புதிதாக இரண்டு பேர் இணைந்துள்ளதால் பாஜகவின் பலம் 14 உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது.

பாஜக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சி (எம்ஜிபி) இரண்டாக உடைந்தது. அந்த கட்சியைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களில் மனோகர் அஜாங்கர், தீபக் பவாஸ்கர் ஆகியோர் கட்சியில் இருந்து பிரிந்து புதிய அணியை உருவாக்கினர். பின்னர் அவர்கள் பாஜகவில் இணைந்தனர்.

இந்த இணைப்பு தொடர்பாக நள்ளிரவில் இருவரும் சபாநாயகர் மைக்கேல் லோபோவிடம் கடிதம் கொடுத்தனர். அந்த கடிதத்தில் மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியின் மற்றொரு எம்எல்ஏவும் துணை முதல்வருமான சுதின் தவாலிகர் கையெழுத்திடவில்லை.

கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் தனி அணியாகப் பிரிந்து, மற்றொரு கட்சியில் இணைந்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

தற்போது 2 எம்எல்ஏக்கள் வருகையால் கோவா சட்டசபையில் பாஜக உறுப்பினர்களின் பலம் 14 ஆக உயர்ந்துள்ளது. காங்கிரசுக்கும் 14 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP