Logo

122 டிகிரி வெப்பம்; பொசுங்கிய மக்கள் - எங்கு தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகபட்சமாக 122 டிகிரி வெப்பம் நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
 | 

122 டிகிரி வெப்பம்; பொசுங்கிய மக்கள் - எங்கு தெரியுமா?

ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகபட்சமாக 122 டிகிரி வெப்பம் நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 122 டிகிரி வெப்பம் கொளுத்தியது. இதனால் சாலையில் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே அடங்கி இருந்தனர். மேலும், அங்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. 

தண்ணீர் எடுக்க பல கிலோ மீட்டர்கள் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கால்நடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதே சூழ்நிலை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP