விலைமாது என்ற சொல் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்ட முடியாது: உச்ச நீதிமன்றம் விசித்திர உத்தரவு!!!

விலைமாது என்று ஓர் பெண்ணை குறிப்பிடும் காரணத்தால், அழைத்தவர் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்ட முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 | 

மேற்கு வங்காள மாநிலத்தில், ஓர் பெண், தனது காதலரின் தந்தை தன்னை விலைமாது என்று குறிப்பிட்டதால் வருத்தமுற்று தற்கொலை செய்துகொண்டதை தொடர்ந்து, அப்பெண்ணின் தந்தை, காதலரின் குடும்பத்தினர் மீது மேற்கு வங்காள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 

இதனை தொடர்ந்து, இந்த வழக்கு குறித்து விசீரணை மேற்கொண்ட மேற்கு வங்காள நீதிமன்றம், விலைமாது என்று குறிப்பிடுவது தற்கொலையை தூண்டுவதற்கான காரணமாக கருதப்பட மாட்டாது என்று தீர்ப்பளித்த நிலையில், மேல் முறையீட்டிற்காக உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளான இந்து மல்ஹோத்ரா மற்றும் ஆர்.சுபாஷ் ரெட்டி கொண்ட குழு, விலைமாது என்ற சொல்லை தற்கொலைக்கு தூண்டும் சொல்லாக கருத முடியாது எனவும், இந்த சொல்லினால் தற்கொலை முயற்சி மேற்கொள்ளப்படுமாயின், அதற்கான சூழ்நிலை மற்றும் பிற அடிப்படை காரணங்களை ஆராய்ந்த பிறகே ஒரு முடிவுக்கு வர இயலும் என்று தீர்ப்பளித்து உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவளித்துள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP