சாமியார் ஆசாராம் பாபுவின் மகனுக்கு ஆயுள் தண்டனை

குஜராத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 | 

சாமியார் ஆசாராம் பாபுவின் மகனுக்கு ஆயுள் தண்டனை

குஜராத்தில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவின் மகன் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002 முதல் 2005ம் ஆண்டு வரை தங்களை சாமியார் ஆசாராம் பாபுவும் அவரது மகன் நாராயண் சாயும் தங்களை தொடர்ந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சகோதரிகள் இருவர் சூரத் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆஸ்ரமத்தை சோதனை செய்தனர். அதில் அங்கு ஏராளமான ஆபாச சிடிகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து புகார் அளித்த பெண்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் பல்வேறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து இது தொடர்பான வழக்கில் கடந்த 26ந்தேதி நாராயண் சாய் உள்பட 10 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.

தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்படும் என்று  அறிவித்திருந்த நிலையில் நாராயண் சாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து சூரத் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP