ரஃபேல் மறுஆய்வு மனுதாக்கல் - நாளை தீர்ப்பளிக்கும் உச்ச நீதிமன்றம் !!

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்து தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள், கடந்த டிசம்பர் 2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, அதற்கான மறுஆய்வு மனுக்கள் தாக்க செய்யப்பட்டன. இதை தொடர்ந்து, அதற்கான தீர்ப்பை நாளை வழங்கவுள்ளது உச்ச நீதிமன்றம்.
 | 

பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் 36 ரஃபேல் போர் விமானங்களை 58ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்கும் ஒப்பந்தம் குறித்த சர்ச்சைதான் ரஃபேல் போர் விமான வழக்கு.

இதை தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அளித்திருந்த புகாரின் பேரில் இந்த வழக்கு குறித்த விசாரணையில் ஈடுபட்டிருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, காங்கிரஸின் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து, இதற்காக மேற்கொள்ளப்பட்ட மறுஆய்வு மனுக்களுக்கான தீர்ப்பை தான் நாளை வழங்கவுள்ளது உச்ச நீதிமன்றம். 

மேலும், ரஃபேல் போர் விமானம் குறித்த மத்திய அரசின் விலை நிர்ணய அறிக்கையை உச்ச நீதிமன்றம் முழுமையாக ஆற்று கொண்டுவிட்ட போதிலும், சில மாறுதல்களை மேற்கொண்ட பின்னர் புதிய அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு. 

இந்நிலையில், இது குறித்த வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி சஞ்சய் கிஷான் கௌல் மற்றும் நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகிய மூவரும் நாளை தீர்ப்பளிக்க உள்ளனர். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP