விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட மாநில பிரச்சனைகளை தீர்க்கவே பாஜகவுடன் கூட்டணி: அஜித்பவார்

விவசாயிகளின் பிரச்சனை உள்ளிட்டவற்றை தீர்ப்பதற்காகவும், நிலையான அரசு அமைந்தால் மாநில பிரச்சனைகள் தீரும் என்பதால் தான் பாஜகவுக்கு ஆதரவு என துணை முதலமைச்சர் அஜித்பவார் தெரிவித்துள்ளார்.
 | 

விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட மாநில பிரச்சனைகளை தீர்க்கவே பாஜகவுடன

விவசாயிகளின் பிரச்சனை உள்ளிட்டவற்றை தீர்ப்பதற்காகவும், நிலையான அரசு அமைந்தால் மாநில பிரச்சனைகள் தீரும் என்பதால் தான் பாஜகவுக்கு ஆதரவு என துணை முதலமைச்சர் அஜித்பவார் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பமாக பாஜக - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியுடன் ஆட்சி அமைந்துள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற தேவேந்திர ஃபட்னாவிஸ் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் தெளிவான தீர்ப்பை வழங்கியும் சிவசேனா ஒத்துழைக்க மறுத்தது. வேறு கட்சிகளுடன் ஆட்சியமைக்க சிவசேனா முயன்றதால் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானது. மகாராஷ்டிராவிற்கு தேவை நிலையான அரசு, கிச்சடி அரசல்ல  என கூறினார். 

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் அஜித் பவார், தேர்தல் முடிவுகள் வெளியானது முதற்கொண்டு எந்த கட்சியும் நிலையான அரசாங்கத்தை அமைக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலம் விவசாயிகளின் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், நிலையான அரசு தேவை என்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்தாக தெரிவித்தார். 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP