உங்கள் மகளை கடத்தியுள்ளோம்! மொபைலுக்கு வரும் புது மெசேஜ்!!

உங்கள் அன்புக்குரிய மகளை கடத்தி வைத்துள்ளோம் என சிங்கப்பூரில் உள்ள பெற்றோர்களின் மொபைலுக்கு மெசேஜ் வருவதாக காவல்துறையினரிடம் புகார் கடிதங்கள் வந்த வண்ணம் உள்ளன.
 | 

சிங்கப்பூரில் உள்ள பெற்றோர்களின் செல்போனில் கடந்த சில நாட்களாக ஒரே மாதிரியான மெசேஜ் அனைவருக்கும் வந்ததாகவும் அதுகுறித்து காவல்துறையினரிடன் புகார் தெரிவித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அந்த மெஜேசில் உங்கள் மகள்/ மகனை கடத்தி வைத்துள்ளோம். பாதுகாப்பாக திரும்ப வேண்டுமானால் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்குப் பண மாற்றம் செய்யுமாறு மிரட்டல் மெசேஜ் அனுப்பிவருகின்றனர். அத்தகைய குறுஞ்செய்திகளைப் பெறுபவர்கள் பண மாற்றம் செய்வதைத் தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுஞ்செய்திகளுக்குப் பதில் அனுப்ப வேண்டாம் என்றும் உடனடியாக காவல்துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை அறிவுரை கூறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்: 1800-255-0000 மற்றும் www.police.gov.sg/iwitness என்ற  இணைய முகவரிக்கு புகார்களை அனுப்பலாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP