சீனாவுக்குக் கம்ப்யூட்டர் சிப்களை வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு

சீனா, அமெரிக்கா இடையே வணிகப் போர் ஏற்பட்டுள்ளதையடுத்து இருநாடுகளும் பொருட்கள் மீது கடுமையான இறக்குமதி வரிகளை விதித்து வருகின்றன. இதன்ஒருபகுதியாகச் சீனாவுக்குக் கணினி சிப்களை வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது
 | 

சீனாவுக்குக் கம்ப்யூட்டர் சிப்களை வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு

சீனாவுக்குக் கணினி சிப்களை வழங்குவதை நிறுத்த அமெரிக்க முடிவெடுத்துள்ளதை அடுத்துத் தைவான் சிப் தயாரிப்பு நிறுவனங்களுடன் சீனா உடன்படிக்கை செய்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே அமெரிக்காவிற்கும், சீனாவிற்கு இடையே காப்புரிமை பிரச்னை நீடித்து வருகிறது. மேலும் தனது மின்னணு சாதனங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை சீனா திருடி வருவதாக அடிக்கடி புகார் எழுந்து வந்தது. 

சீனா, அமெரிக்கா இடையே தீவிர வணிகப் போர் ஏற்பட்டுள்ளதையடுத்து இருநாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்கள் மீது  கடுமையான வரிகளை விதித்து வருகின்றன. இந்த வணிகப் போரின் ஒருபகுதியாகச் சீனாவுக்குக் கணினி சிப்கள் வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவெடுத்துள்ளது. இதனால் தைவானில் உள்ள சிப் தயாரிப்பு நிறுவனமான யுனைட்டெட் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசனுடன் சீனாவின் பியூஜியன் ஜின்குவா இன்டக்ரேட்டட் சர்க்கியூட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி சீனாவுக்கு அமெரிக்கா சிப்களை ஏற்றுமதி செய்யாவிட்டாலும் சீனாவுக்கு தேவைப்படும் சிப்கள் தொடர்ந்து கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் சீனா 19 லட்சத்து 63ஆயிரம் கோடி ரூபாய்க்கு சிப்களை இறக்குமதி செய்துள்ளது குறிப்பிடதக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP