தென்கொரியாவை ஸ்தம்பிக்க வைத்த பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு!

தென்கொரியாவில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனம் சிதறக் கூடாது என்பதற்காக புதிய கட்டுபாடுகளும், பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. ஒரு தேர்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர்...
 | 

தென்கொரியாவை ஸ்தம்பிக்க வைத்த பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு!

பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனம் சிதறக் கூடாது என்பதற்காக புதிய கட்டுபாடுகளும், பல்வேறு வசதிகளும் வழங்கி தென்கொரிய கல்வி அமைச்சகம் அந்நாட்டையே ஸ்தம்பிக்க வைத்துள்ளது. 

ஆண்டு தோறும், தென் கொரியா முழுவதும் ஒரு நாள் ஸ்தம்பித்து போகும். விமான பயண நேரம் தாமதமாகும், பங்கு சந்தைகள் தாமதமாக திறக்கும் மற்றும் விமானங்கள் தரையிறங்கவோ, புறப்படவோ தடை செய்யப்படும், வங்கிகள் தாமதமாக திறக்கப்படும், ஏனென்றால் அன்றைய நாள் சிசாட் எனப்படும் கல்லூரி கல்வியியல் திறன் தேர்வு நடத்தப்படும் நாள்.

சமூக அந்தஸ்து, நல்ல வேலை, திருமணவரன் என அனைத்திலும் இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. 9 மணி நேரம் நடைபெறும் இந்த தேர்வில் சுமார் 5 லட்சத்து 94 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்றுள்ளனர். தேர்வுக்காக, வியப்பிற்குரிய நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு எடுத்துள்ளது. ஒரு தேர்வுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதெல்லாம் ரொம்ப ஓவர் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP