Logo

ஒற்றுமை : புதிய விளக்கம் அளிக்கும் பென்னி காண்ட்ஸ்!!

இஸ்ரேல் : ஏற்கனவே இரண்டு முறை தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் ஓர் தேர்தல் என்ற நிலை வராமல் இருக்க தன்னால் இயன்றவற்றை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ப்ளூ மற்றும் வைட் கட்சியை சேர்ந்த பென்னி காண்ட்ஸ்.
 | 

ஒற்றுமை : புதிய விளக்கம் அளிக்கும் பென்னி காண்ட்ஸ்!!

இஸ்ரேல் : ஏற்கனவே இரண்டு முறை தேர்தல்கள் முடிவடைந்துள்ள நிலையில், மேலும் ஓர் தேர்தல் என்ற நிலை வராமல் இருக்க தன்னால் இயன்றவற்றை செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ளார் ப்ளூ மற்றும் வைட் கட்சியை சேர்ந்த பென்னி காண்ட்ஸ்.

இஸ்ரேல் நாட்டில் கடந்த ஏப்ரல் மற்றும் செப்டம்பர் என இரண்டு மாதங்களில் இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற நிலையிலும், ஆட்சியை அமைக்க முடியாத நிலை நீடித்து வந்தது. இதை தொடர்ந்து, ஏற்கனவே இரண்டு தேர்தல்கள் முடிவுற்ற நிலையில், மீண்டும் ஓர் தேர்தல் நடைபெறுவதை விரும்பாத அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், பென்னி காண்ட்ஸ்-ஐ தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த பென்னி காண்ட்ஸ், "ஒற்றுமை என்பது அனைவரும் ஒரே காரணதிற்காக ஒரே நபராக செயல்படுவதில்லை, நாட்டின் நலனுக்காக அனைவரும் தங்களின் விருப்பு வெறுப்புக்களை துறந்து ஒன்றாக ஒருங்கிணைந்து உழைப்பதே ஒற்றுமையாகும்" என்று கூறியுள்ளார். 

மேலும், கடந்த தேர்தலில், இஸ்ரேலிய மக்கள் அனைவரும் ஒற்றுமையை தேர்ந்தெடுத்த நிலையில், சில அரசியல்வாதிகள் தங்களுக்கான தனிபட்ட விஷயங்களில் கவனம் செலுத்தி வந்தனர். ஆனால், முன்னரே இரு தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மீண்டும் ஓர் தேர்தலுக்கு நம் தேசத்தை கொண்டு செல்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும், அத்தகைய செயல் நடைபெறாமல் இருக்க தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் பென்னி காண்ட்ஸ்.

இவரின் தற்போதைய இந்த நிலைபாடு கண் கெட்ட பிறகு செய்யப்படும் சூரிய நமஸ்காரத்தை போல, தோல்வியை தழுவ போகிறோம் என்று அறிந்த பிறகு அளிக்கும் வாக்குமூலம் போன்றே தெரிகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP