Logo

நாடாளுமன்ற விசாரணைக்கு வர முடியாது: மார்க் ஜுக்கர்பெர்க்

சர்வதேச நாடுகளின் நாடாளுமன்ற கமிட்டி ஒன்று பேஸ்புக் நிறுவனத்தின் பாதுகாப்பு தொய்வுகள் குறித்து கேள்வியெழுப்ப அந்நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்கை அழைத்திருந்த நிலையில், அவர் ஆஜராக மறுத்துவிட்டார்.
 | 

வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடியது, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா சர்ச்சை, போலி செய்திகளின் தாக்கம், உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள பேஸ்புக் நிறுவனத்தின் மீது, பல்வேறு நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன. 

முன்னதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் ஆஜராகி, பேஸ்புக்கில் நடைபெற்ற விதிமீறல்கள் குறித்த நாடாளுமன்ற கமிட்டியின் கேள்விகளுக்கு மார்க் ஜுக்கர்பெர்க் பதிலளித்தார். இந்நிலையில், பிரிட்டன் மற்றும் கனடா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து ஒரு சர்வதேச கமிட்டியை உருவாக்கி, மார்க் ஜுக்கர்பெர்க் கமிட்டியின் முன் ஆஜராக அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை பேஸ்புக் நிறுவனம் நிராகரித்துள்ளது. நவம்பர் 27ம் தேதி இந்த விசாரணை நடைபெறவிருந்த நிலையில், "மார்க் ஜுக்கர்பெர்க்கால் எல்லா நாட்டின் நாடாளுமன்றங்களின் முன்நும் ஆஜராக முடியாது" என அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதுகுறித்து பிரிட்டன் நாடாளுமன்ற ஊடக கமிட்டியின் தலைவர் டேமியன் காலின்ஸ் பேசியபோது, "சர்வதேச அளவில் நெருக்கடி எழுந்து வருகிறது. மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு அழைப்பு  விடுக்கப்பட்ட பின், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, அயர்லாந்து ஆகிய நாடுகளும் இந்த சர்வதேச கமிட்டியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்" என்றார்.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP