Logo

ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பங்கு கொள்ள முடியாததற்கு தேர்தல் பணிகளே காரணம் -  துளசி கப்பார்ட்

யுஎஸ் ஜனநாயக கட்சியை சேர்ந்த துளசி கப்பார்ட் "ஹௌடி மோடி" நிகழ்விற்கு வர மறுத்து விட்டதாக, பத்திரிக்கையாளர் ராணா அய்யூப் கூறியதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் துளசி கப்பார்ட் .
 | 

அவரது டிவிட்டர் பதிவில், "தேர்தல் பணிகள் உள்ள காரணத்தினாலேயே அந்நிகழ்வில் பங்கு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்திய அமெரிக்க உறவை மேலும் பலப்படுத்தும் நோக்கத்துடன், மோடியின் அமெரிக்க பயணம் முடியும் முன்பு அவரை நிச்சயமாக சந்தித்து பேசுவேன்" எனக் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் எரிபொருள் வர்த்தகத்தின் தலை நகரமென கருதப்படும் ஹூஸ்டன் நகரில் உள்ள, என்.ஆர்.ஜி அரங்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் 50,000 இந்திய வம்சாவழியினர் கலந்து கொள்ள பதிவு செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வருகை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்காவிலுள்ள இந்திய வம்சாவழியினர் மாநாட்டில் கலந்துக் கொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெறவிருக்கிறார் ட்ரம்ப்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP