நடுவானில் குழந்தை பெற்றெடுத்த பெண்

அபுதாபியில் இருந்து ஜகார்த்தா சென்ற EY474 எத்தியாட் ஏர்வேஸ் விமானம், அரேபியக் கடலுக்கு மேல் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது
 | 

நடுவானில் குழந்தை பெற்றெடுத்த பெண்

எத்தியாட் விமானத்தில் பயணித்தபோது நடுவானில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

அபுதாபியில் இருந்து ஜகார்த்தா சென்ற EY474 எத்தியாட் ஏர்வேஸ் விமானம், அரேபியக் கடலுக்கு மேல் சென்றுக்கொண்டிருந்தது. அப்போது இந்தோனேசியாவைச் சேர்ந்த பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, மும்பையில் இன்று பிற்பகலில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு காத்திருந்த மருத்துவர்கள் குழு உதவியோடு, ஆம்புலன்ஸ் மூலம் தாயையும், குழந்தையையும் மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதன் காரணமாக விமானம் ஜகார்த்தா செல்ல 2 மணி நேரம் தாமதமானது. பயணிகளின் பாதுகாப்பே தங்களுக்கு முக்கியம் என்பதால், தடங்கலுக்கு வருந்துவதாக எத்தியாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. 

Newstm.in 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP