Logo

கன்னியாஸ்திரிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது உண்மையே - போப் ஒப்புதல்

பாலியல் வன்கொடுமை குறித்த கேள்விக்கு, “சில பாதிரியார்களும், பேராயர்களும் இதைச் செய்கிறார்கள். இது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வளவு எளிதில் முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல இது’’ என்று பதில் அளித்தார் போப் பிரான்சிஸ்.
 | 

கன்னியாஸ்திரிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது உண்மையே - போப் ஒப்புதல்

பாதிரியார்கள் மற்றும் பேராயர்களால், கன்னியாஸ்திரிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவது உண்மைதான் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ திருச்சபைகளின் தலைவரான போப் பிரான்சிஸ் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு நீண்டகால தீர்வை ஏற்படுத்த முயற்சி நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு போப் பிரான்சிஸ் அண்மையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, வாடிகன் திரும்புகையில் விமானத்தில், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது, கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் வன்கொடுமை மற்றும் இதர பாலியல் தொந்தரவுகள் குறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “சில பாதிரியார்களும், பேராயர்களும் இதைச் செய்கிறார்கள். பிரச்னை எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அதே சமயம், புதிதாக சபை கூடும் இடங்களிலும், புதிய பகுதிகளிலும் இது அதிகமாக இருக்கிறது. இது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அவ்வளவு எளிதில் முடிந்துவிடக் கூடிய ஒன்றல்ல இது. ஏராளமான மத போதகர்களை வாடிகன் தலைமையகம் நீக்கியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு நீண்ட கால தீர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். பெண்களை இரண்டாம் தரமாகக் கருதும் கலாசாரம் காரணமாகவும் இந்தப் பிரச்னை நீடிக்கிறது’’ என்று பதில் அளித்தார் போப்.

கன்னியாஸ்திரிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது உண்மையே - போப் ஒப்புதல்

முன்னதாக, வாடிகனில் இருந்து வெளிவரும், மகளிர் நலன் சார்ந்த பத்திரிகையில் கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்த கட்டுரையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் கன்னியாஸ்திரிகள் கருக்கலைப்பு செய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுகின்றனர் அல்லது அக்குழந்தைக்கு தந்தையான பாதிரியாரிடம் இருந்து அதற்குரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சர்ச்சுகளில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை ஒருபோதும் மாறப் போவதில்லை என்றும் அந்தக் கட்டுரையை எழுதியிருந்த ஆசிரியர் லுகெட்டா கராஃபியா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், போப் பிரான்சிஸ் தெரிவித்திருக்கும் கருத்து முக்கியமானது.

கன்னியாஸ்திரிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது உண்மையே - போப் ஒப்புதல்

அதே சமயம், கேரளாவில் கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராயர் பிராங்கோ முல்லகலை, கன்னியாஸ்திரிகளின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு பிறகு வாடிகன் தலைமையகம் பதவிநீக்கம் செய்தது என்பதும், அதற்குப் பிறகே கேரள அரசு அவரை கைது செய்தது என்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP