Logo

இந்தியாவின் மீது பாகிஸ்தான் மறைமுகத் தாக்குதல்

இந்தியாவை ஏதேனும் ஒரு வகையில் தாக்க வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் பாகிஸ்தான், இப்போது பழைய கதை ஒன்றை கையில் எடுத்துள்ளனர்.
 | 

இந்தியாவின் மீது பாகிஸ்தான் மறைமுகத் தாக்குதல்

இந்தியாவை ஏதேனும் ஒரு வகையில் தாக்க வேண்டும் என்று முனைப்புடன் இருக்கும் பாகிஸ்தான், இப்போது பழைய கதை ஒன்றை கையில் எடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி லெப்டினன்ட் ஹபிப் ஜாஹிர் கடந்த ஏப்ரல் 6, 2017 -ல் காணாமல் போனதற்கு இந்தியாவே காரணம் என புதியதொரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், இராணுவ அதிகாரி ஹபிப் ஜாஹிர்  ஓய்விற்கு பின் வேலைக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், அது தொடர்பாக நேபால் சென்ற அவர் வீடு திரும்பவில்லை எனவும், அவருக்கு வேலை தொடர்பாக வந்த அழைப்பு மார்க் என்ற பெயரில் போலியாக இந்தியாவில் இருந்து அனுப்பட்டதாகவும் கூறியது. பாகிஸ்தான் இது தொடர்பாக பல முறை கேட்டும் இந்தியா எந்த பதிலும் அளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளது. 

அவரின் உறவினர்கள், ஐக்கிய நாடுகளின் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் குழுவிற்கு அவரை கண்டுபிடிக்கக் கோரி கோரிக்கை விடுத்துள்ளதாகவும் பாகிஸ்தான் குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவை தாக்கி வந்த பாகிஸ்தானுக்கு, மற்ற நாடுகளின் ஆதரவு கிடைக்காததாலும், மதத்தின் பேரில் இந்துக்கள் மீதான வன்முறையை கண்டித்து போராட்டங்கள் வெடித்துள்ளதாலும், இந்தியாவை தாக்க பாகிஸ்தான் இதை ஒரு புது ஆயுதமாக கையில் எடுத்திருக்கலாம்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP