வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2018ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் பிரான்சஸ் எச் அர்னால்டு, ஜார்ஜ் பி ஸ்மித் மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த க்ரெகரி பி வின்டர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2018ம் ஆண்டில் வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் பிரான்சஸ் எச் அர்னால்டு, ஜார்ஜ் பி ஸ்மித் மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த க்ரெகரி பி வின்டர் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயற்பியல் மற்றும் மருத்துவத்திற்காக நோபல் பரிசுகள் கடந்த சில நாட்களில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று வேதியியலுக்கான பரிசு அறிவிக்கப்பட்டது. இதை, 3 விஞ்ஞானிகள் தங்களிடையே பகிர்ந்து கொண்டுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த  பிரான்சஸ் எச் அர்னால்டு, ஜார்ஜ் பி ஸ்மித் மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த க்ரெகரி பி வின்டர் ஆகியோர், புரதங்கள் மூலம் பரிணாம வளர்ச்சி தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளுக்காக நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது. 

பிரான்சஸ் அர்னால்டு, புரதத்தின் பரிணாம வளர்ச்சி தொடர்பாக செய்த ஆராய்ச்சிக்காகவும், ஜார்ஜ் ஸ்மித், வைரஸ்கள் மூலம் பேக்டீரியாவை தாக்கி அதன் மூலம் புரதத்தின் பரிணாம வளர்ச்சி குறித்த அறிவு செய்ததற்காகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஃபேஜ் டிஸ்பிளே எனும் தொழில்நுட்பம் மூலம் புதிய மருந்துகளை கண்டுபிடித்ததற்காக க்ரெகரி வின்டருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP