Logo

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் பிரச்னை ஏதும் இல்லை: சாமரம் வீசும் சீன தூதர்!!!

இந்தியாவின் மாமல்லபரத்தில் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்த மேற்கொள்ளவிருக்கும் சீன அதிபர் ஜீ ஜிங் பிங்கை வரவேற்க தமிழ்நாடு கோலாகலமான முறையில் தயாராகி வரும் நிலையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை என சன் வைடாங் கூறியுள்ளார்.
 | 

நாளை சீன அதிபர்  ஜீ ஜிங் பிங், பல்லவ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், மிக முக்கிய துறைமுக நகரமாக திகழ்ந்த மாமல்லபுரத்தில் வைத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவிருக்கும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என இந்தியாவின் சீன தூதர் சன் வைடாங் குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையான வர்த்தக உறவை இந்த சந்திப்பு மேலும் அதிகரிக்கும் என்றும், பொருளாதாரத்தை அதிகரிக்கும் வகையான ஒப்பந்தங்கள் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் காஷ்மீர் விவகாரம் இருநாடுகளுக்கு இடையே உள்ள விவகாரம். அதை சம்பந்தபட்டவர்களே பேசித்தீர்த்துக்கொள்ள வேண்டும் என சீன அதிபர் ஜீ ஜிங் பிங் கூறியிருந்த நிலையில், காஷ்மீரில் நடைபெற்று வரும் மாற்றங்களை நாங்கள் கூர்ந்து கவனித்த வருகிறோம் என அந்நாட்டு அயலுறவுத்துறை அதிகாரி அறிவித்திருந்தது தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதன் காரணமாகவே, தற்போது, இந்தியாவின் சீன தூதர் சன் வைடாங் மேற்கண்ட கருத்தை கூறியிருப்பார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP