மோடியே ட்ரம்பின் நண்பர் - பாகிஸ்தானின் முன்னாள் அமெரிக்க தூதர்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஹூஸ்டன் நகரில் இந்திய வம்சாவழியினர் "ஹௌடி மோடி" என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளதையடுத்து, ட்ரம்ப் மற்றும் மோடி இருவரும் இந்த ஆண்டு மூன்றாவது முறையாக சந்திக்கவுள்ளனர்.
 | 

அமெரிக்காவின் எரிபொருள் வர்த்தகத்தின் தலை நகரமாக கருதப்படும் ஹூஸ்டன் நகரில் உள்ள, என்.ஆர்.ஜி அரங்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நடக்கவிருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியான "ஹௌடி மோடி" க்கு, ட்ரம்ப் - ன் வருகை உறுதி செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் அமெரிக்க தூதர் ஹூசைன் ஹக்கானி, "ட்ரம்பின் இந்த முடிவு அவர் மோடியையே தன் நண்பராக கருதுகிறார் என்பதை தெளிவுப் படுத்துகிறது" என்றுக் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஜி 20 மாநாடும், ஜூலை மாதம் பிரான்ஸில் நடைபெற்ற ஜி 7 மாநாடும், இரு தலைவர்களுக்குமான, இந்த ஆண்டின் முதல் இரு சந்திப்புகளாக அமைந்த நிலையில், ஹூஸ்டனில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சி, மோடி மற்றும் ட்ரம்பின், இந்த ஆண்டின் மூன்றாவது சந்திப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க - இந்திய ராஜரீக உறவு மற்றும்  செயலாக்க அமைப்பான யு.எஸ்.ஐ.எஸ்.பி.எஃப் - ன் தலைவர் முகேஷ் அக்னி கூறுகையில், "இவ்விரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்புகள், இரு நாடுகளும் நல்ல ஒரு நட்பு நிறைந்த உறவில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

2014 - ல் நடைபெற்ற இம்மாநாட்டிற்கு, யுஎஸ் - ன் காங்கிரஸ்காரர்கள் பங்கு கொண்ட காரணத்தால் இம்மாநாட்டிலும் அவர்களின் வருகை எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் சில முக்கிய தலைவர்களான டெட் குரூஸ், அல் க்ரீன், பீட் ஓல்சன், ஷெய்லா ஜாக்ஸன் லீ, சில்வுயா கார்சியா மற்றும் கிரெக் அபாட் ஆகியோரும் பங்குக் கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP