Logo

கடவுளின் உத்தரவு எனக்கூறி சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்

கடவுளின் உத்தரவு எனக் கூறி, தமது பெண் சீடர்கள் 9 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தென்கொரிய மதபோதகர் ஜேராக் லீ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
 | 

கடவுளின் உத்தரவு எனக்கூறி சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகர்

கடவுளின் உத்தரவு எனக் கூறி, தமது பெண் சீடர்கள் 9 பேரை பாலியல் வன்கொடுமை செய்ததாக தென்கொரிய மதபோதகர் ஜேராக் லீ சிறையில் அடைக்கப்பட்டார்.

பிரசங்க மேடையில் இருந்தபடியே எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளிட்டவற்றை குணப்படுத்துவதாகக் கூறி சர்ச்சையில் சிக்கியவர் ஜேராக் லீ. அவர், கடவுளுக்கு நிகரானவர் என பலராலும் கருதப்படுகிறார். லீ, தமது பெண் சீடர்கள் 9 பேரை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து நடைபெற்ற வழக்கு விசாரணையில், கடவுளின் உத்தரவு என லீ கூறியதால், பலாத்காரம் என கருதாமல், புனிதம் என பல பெண்கள் கருதியதாக தெரியவந்துள்ளது. மேலும், லீயின் கொடுமையை எதிர்த்துக் கேள்வி கேட்பதால் பாவம் வந்து சேரும் எனஅவர்கள் அஞ்சியதாகவும் விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். லீ மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதாக கூறிய நீதிமன்றம் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அவர் சிறையிலடைக்கப்பட்டார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP