Logo

இந்தியா-சீனா வர்த்தக உறவை பரைசாற்றும் மாமல்லபுரம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழ்நாட்டின் காஞ்சிபுர மாவட்டத்தின், மாமல்லபுரத்திற்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவரது வருகைக்காக அங்கே பிரம்மாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 | 

இந்தியா-சீனா வர்த்தக உறவை பரைசாற்றும் மாமல்லபுரம்

சீன அதிபர் ஜீ ஜின்பிங் தமிழ்நாட்டின் காஞ்சிபுர மாவட்டத்தின், மாமல்லபுரத்திற்கு வர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவரது வருகைக்காக அங்கே பிரம்மாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்லவ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில், மிக முக்கிய துறைமுக நகரமாக திகழ்ந்தது மாமல்லபுரம், இருநாட்டு தலைவர்களும் அங்கே கூடிய விரைவில் சந்திக்கவிருக்கும் இவ்வேலையில், இரண்டாம் நூற்றாண்டுகளில், இந்தியா - சீனா இடையே வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டதற்கான தொல்லியல் ஆதாரங்களை குறித்து, தொல்லியல் ஆய்வாளரும்,அழகப்பா பல்கலைக்கழக ஆசிரியருமான எஸ். ராஜவேலு விளக்கமாக கூறியுள்ளார்.

இந்தியா-சீனா வர்த்தக உறவை பரைசாற்றும் மாமல்லபுரம்

"முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்ட, சிலேடன் வேர் எனப்படும் மண்பானை, சினாவின் துறைமுக நகரங்களிலும் கண்டெடுக்கப்பட்டது. இந்த வகை கண்டுப்பிடிப்புகள் இரு துறைமுக நகரங்களின் வர்த்தக உறவுக்கு எடுத்துக்காட்டாக அமையும்.

சீனர்கள் உபயோகித்து வந்த சில்லரைகள் இந்தியாவில் கிடைக்கப்பட்டதும் இரு நாடுகளின் வர்த்தகத்தை நிரூபிக்கின்றன. சங்கக்காலத்தின் பழம்பெறும் இலக்கியமான "பட்டிணப்பாலை" யில் சீனர்களுடனான உறவை குறித்த தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

நூலாசிரியர் உருத்திரன் கண்ணனார், தனது நூலில் "துங்கு நாவே" என்ற வார்த்தை மூலம் சீனர்களின் "சங்க்" எனப்படும் படகை குறிப்பிட்டுள்ளார் என வரலாற்று தகவல்கள் கூறுகின்றன. மாமல்லபுரத்தில் உள்ள வயலூர் கல்வெட்டுகளிலும் சீனர்கள் மற்றும் பல்லவர்களின் உறவு குறித்த செய்திகள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது" என்று ராஜவேலு கூறுகிறார்.

சீனத்துறவி ஹுவான் சுவாங் 7ஆம் நூற்றாண்டில், புத்த மதத்தின் மீது இருந்த ஆர்வத்தினால், அது குறித்து மேலும் அறிவதற்காக "கடிகா" (பல்கலைக்கழகம்) என்று அப்போது அழைக்கப்பட்ட காஞ்சிபுரத்திற்கு வருகை புரிந்தார் என்று வரலாறுகள் கூறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, சீனர்களின் நூல்களில், காஞ்சிபுரத்தை "ஹூவாங் சீ" என்று குறிப்பிட்டுள்ளதாகவும், அப்போது சீனாவில் ஆட்சிப்புரிந்த அரசர்கள், இந்திய மன்னர்களுக்கு பல பரிசு பொருட்கள் அனுப்பி வைத்திருப்பதாகவும் அவர்களின் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2004 ஆம் ஆண்டு, காஞ்சிபுரத்தின் சுலுவான்குப்பம் என்னும் இடத்தில் மேற்கொண்ட தொல்லியல் ஆராய்ச்சியின் முடிவில், 2000ம் ஆண்டுகளுக்கு முன்னர், மாமல்லபுரம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு துறைமுகமாக இருந்ததற்கான பல ஆதரங்கள் கண்டெடுக்கப்பட்டன என்று ராஜவேலு கூறியுள்ளார்.

இத்தனை சிறப்பு மிக்க மாமல்லபுரத்தை, சீன அதிபர்  ஜீ ஜின்பிங், இன்னும் சில நாட்களில் பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP