வர்த்தகம் நிறுத்தப்பட்டாலும், காஷ்மீர் குறித்த எங்களின் நிலைபாடு மாறாது - மலேசிய பிரதமர் கருத்து

மலேசியாவுடனான பாமாயில் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளப்போவதாக, இந்தியாவின் முக்கிய எண்ணெய் வர்த்தக நிறுவனம் கூறியிருந்ததை தொடர்ந்து, வர்த்தகத்தை நிறுத்திக் கொள்வதால் காஷ்மீர் விவகாரத்தில் தங்களின் நிலை மாறப்போவதில்லை என்று கூறியுள்ளார் மலேசியா பிரதமர் மஹதீர் முஹமது.
 | 

செப் 27., அன்று நடைபெற்ற, ஐக்கிய நாடுகளின் பொது சபை மாநாட்டில் உரையாற்றிய மலேசிய பிரதமர் மஹதீர் முஹமது, காஷ்மீர் அந்தஸ்தை திரும்ப பெற்றதில் இந்தியா தன் அதிகாரத்தனத்தை காட்டியிருப்பதாக குறிப்பிட்டதை தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய எண்ணெய் வர்த்தக நிறுவனம் மலேசியாவுடனான பாமாயில் வர்த்தகத்தை நிறுத்திக் கொள்ளப்போவதாக கூறியிருந்தது.

"மலேசியாவுடனான, பாமாயில் (பனை எண்ணெய்) வர்த்தக நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா, காஷ்மீர் விவகாரத்தில் கருத்து தெரிவித்ததன் காரணமாக எங்களுடனான வர்த்தக உறவை நிறுத்தியிருந்தால் அதை நாங்கள் வர்த்தக ரீதியாகவே தீர்க்க முயல்வோம்" என்று கூறியுள்ளார் அந்நாட்டின் பிரதமர் மஹதீர் முஹமது.

மேலும், "ஜ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானங்களுக்கு அதில் உள்ள அனைத்து நாடுகளும் கட்டுப்படுவதே அந்த சபைக்கு நாம் அளிக்கும் மரியாதை. இந்நிலையில், 1950 ஆம் ஆண்டுகளில், பொது வாக்கெடுப்பின் மூலமே ஜம்மு காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்ற முடிவுக்கு வர வேண்டும் என்று ஐ.நா. சபையில் கூறப்பட்டிருந்தது. இதற்கு ஒப்புதல் அளித்த இருநாடுகளில், இந்தியா அதனை மீறியுள்ளது" என்ற கூறியதன் மூலம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் மீண்டும் மூக்கை நுழைத்துள்ளார் மஹதீர் முஹமது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP