Logo

பாமரனிடம் பேசுவதுபோல் இம்ரான் பேசுகிறார்: சுப்ரமணியம் சுவாமி கருத்து

சாலையோர பாமரனிடம் பேசுவதுபோல் பாகிஸ்தான் பிரதமர் ஐநா சபையில் பேசியுள்ளதாக பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

பாமரனிடம் பேசுவதுபோல் இம்ரான் பேசுகிறார்: சுப்ரமணியம் சுவாமி கருத்து

சாலையோர பாமரனிடம் பேசுவதுபோல் பாகிஸ்தான் பிரதமர் ஐநா சபையில் பேசியுள்ளதாக பாரதிய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியம் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ரோஸ் அவின்யூ கோர்ட்டில் வைத்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், "பாகிஸ்தான் பிரதமரின் பேச்சிற்கு, பாகிஸ்தானில் இருக்கும் படிக்காத பாமரன் தான் கைதட்ட வேண்டும். பாகிஸ்தான் இராணுவம் இம்ரான் கானை "நப்புன்சாக்" எனக் கூறி அவமதித்ததன் காரணமாகவே  அவர் இவ்வளவும் பேசியிருப்பார் என எனக்கு தோன்றுகிறது. இந்திய பிரதமர் மோடியின் பேச்சு, உலக மக்கள் அனைவருக்குமானதாக இருந்தது. ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு காஷ்மீரை பற்றி மட்டுமே இருந்தது. 

மேலும், 2013 இல் சுஷில் குமார் ஷிண்டே ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை உருவாக்குவதாக கூறியிருந்தார் என்று இம்ரான் கான் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து அமர்ந்திருக்கும் அரங்கில், இதை குறிப்பிடுவது சரியில்லை என்பது கூடவா ஒரு நாட்டின் பிரதமருக்கு தெரியவில்லை? 

இவரின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சுகளை கேட்கும் போது, பாகிஸ்தான் பிரதமர் உலக நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் பேசுவது போல் பேசவில்லை; ஏதோ சாலையோர பாமரனிடம் நடத்தும் உரையாடலாகவே அவரது பேச்சு எனக்கு தோன்றியது" என சுப்ரமணியம் சுவாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஐக்கிய நாடுகளின் பொது கூட்டத்தில், பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு தக்க பதிலடி தரும் வகையில் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் முதல் செயலாளர் விதிஷா மைத்ரா, "பாகிஸ்தான்  பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், அணு ஆயுதங்கள் கொண்ட இரண்டு நாடுகளுக்குமிடையே வழக்குகளும், சச்சரவுகளும் தொடர்ந்து நடக்கும் நிலையில், அணு ஆயுத போருக்கே அது வழிவகுக்கும்" என்று குறிப்பிட்டார். இவரின் இந்த பேச்சு அமைதியை விரும்பும் ஒரு தலைவரின் பேச்சாக தெரியவில்லை" என்று குறிப்பிட்டிருந்தார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP