குர்தீஷ் மக்களின் உயிரிழப்புக்கு நீங்கள் காரணமானால், உங்களது பொருளாதார இழப்புக்கு நான் காரணமாவேன் - துருக்கி அதிபரை பலமாக எச்சரித்த ட்ரம்ப்

துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில், வசித்து வரும், குர்தீஷ் இன மக்கள் மீது, துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டிருப்பதை தொடர்ந்து, துருக்கி அதிபரை எச்சரித்து கடிதம் அனுப்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
 | 

குர்தீஷ் மக்களின் உயிரிழப்புக்கு நீங்கள் காரணமானால், உங்களது பொருளாதார இழப்புக்கு நான் காரணமாவேன் - துருக்கி அதிபரை பலமாக எச்சரித்த ட்ரம்ப்

துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில், வசித்து வரும், குர்தீஷ் இன மக்கள் மீது, துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டிருப்பதை தொடர்ந்து, துருக்கி அதிபரை எச்சரித்து கடிதம் அனுப்பியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.

சிரியாவின் ஐஎஸ் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து விட்டதாகவும், அதனால், துருக்கி எல்லையில் இருக்கும் அமெரிக்க படைகளை வாபஸ் வாங்க உள்ளதாகவும் அமெரிக்க அதிபர் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார். 

அதுமட்டுமின்றி சிரியாவில் உள்ள ஏனைய அதிருப்தியாளர்களை துருக்கி எல்லை மீறாமல் கையாண்டு கொள்ளலாம் எனவும் எல்லை மீறினால், பின் பொருளாதார ரீதியான பெரும் இழப்பை துருக்கி சந்திக்க வேண்டியிருக்கும் என துருக்கி அரசுக்கு ஒரு எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

எனினும், ட்ரம்பின் எச்சரிக்கையும் மீறி, துருக்கி நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிரிய எல்லை பகுதியில் முகாமிட்டு செயல்பட்டு வரும் அந்நாட்டின் சிறுபான்மை இனத்தவரான குர்தீஷ் மக்கள் படையினர் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றது. 

இதனிடையில், குர்தீஷ் இன மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை இத்துடன் நிறுத்திக்கொள்ளுமாறு துருக்கி அதிபருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஏர் கடிதம் அனுப்பியுள்ளார் ட்ரம்ப்.

அந்த கடிதத்தில், "பல ஆயிரம் மக்களின் உயிரிழப்புக்கு நீங்கள் காரணமாக இருக்க வேண்டாம் என்றும் உங்களின் பொருளாதார இழப்பிற்கு நான் காரணமாக வேண்டாம் என்றும் நான் விரும்புகிறேன். மனிதாபிமானத்துடன் நீங்கள் நடந்துக்கொண்டால், வரலாறு உங்களை வாழ்த்தும். இப்போது நாம் ஒரு முடிவுக்கு வருவோம். முட்டாள் தனமான முடிவுகள் எடுக்க வேண்டாம்" என கடுமையாக எச்சரித்துள்ளார்.

குர்தீஷ் மக்களின் உயிரிழப்புக்கு நீங்கள் காரணமானால், உங்களது பொருளாதார இழப்புக்கு நான் காரணமாவேன் - துருக்கி அதிபரை பலமாக எச்சரித்த ட்ரம்ப்

துருக்கியின் இந்த செயலை, சர்வதேச நாடுகள் அனைத்தும் கடுமையாக கண்டித்து வரும் நிலையில், மனித நேயத்துடன் நடந்துக்கொள்ளுமாரும், இந்நிலை தொடர்ந்தால், வேறு விதமான பெரும் விளைவுகளை துருக்கி சந்திக்க நேரிடும் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது இந்தியா.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP