இந்தியா வெங்காயம் தரவில்லையெனில் என் வீட்டு சமையலில் இனி வெங்காயம் சேர்க்க வேண்டாம் - ஷேக் ஹசீனா!!!

இந்தியா வெங்காய ஏற்றுமதியை நிறுத்தி விட்டதால், தன் வீட்டில் வெங்காயம் சமைக்க வேண்டாம் என முடிவு செய்திருப்பதாக நகைச்சுவையாக கூறியுள்ளார் வங்காள பிரதமர் ஷேக் ஹசீனா.
 | 

உலகளவில், வெங்காய ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கும் இந்தியா, பருவமழை மாற்றம் காரணமாக, அதன் உற்பத்தி மிகுந்த பாதிப்படைந்து, வெங்காயங்களின் விலை வானை தொட்டிருக்கும் நிலையில், மத்திய தொழில்துறை அமைச்சகம், கடந்த செப் 29., ஆம் தேதி, இந்தியா, வெங்காய ஏற்றுமதியை நிறுத்திவிட்டது. 

இதை தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த வியாழனன்று நடைபெற்ற, சர்வதேச பொருளாதார அமைப்பின், இந்திய பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, இந்தியா வெங்காய ஏற்றுமதியை நிறுத்தி விட்டதால், தனது சமையல்காரரிடம், வெங்காயம் சமைக்க வேண்டாம் என்று கூறிவிட்டதாக அவர் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

மேலும், இந்த சந்திப்பின் போது, இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக குடியேறியிருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றிட உதவிடும் வகையில் தயாரிக்கப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேடு நடவடிக்கை நியாயமானதுதான் எனவும், பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்திட வேண்டும்  என்ற நோக்கத்துடன் செயல்படும் இந்தியாவிற்கு தனது ஆதரவு எப்போதும் உண்டு எனவும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP