Logo

பிரதமர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு!!

ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக வெகு விரைவில் காஷ்மீர் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அஜித் தோவல் இருவரையும் சந்தித்து உரையாடினர்.
 | 

கடந்த ஆகஸ்ட் 5 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்ப பெற்று, அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவிக்க, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததை தொடர்ந்து, அம்மாநில மக்களின் தற்போதைய நிலை குறித்து அறிவதற்காக கூடிய விரைவில் காஷ்மீர் மாநிலம் செல்ல உள்ள ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இருவரையும் டெல்லியில் சந்தித்து உரையாடினர்.

இந்த உரையாடலின் போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் தெளிவாக விளக்கியதை தொடர்ந்து, அவர்களை நேரில் சந்தித்து உரையாடுவதன் மூலம் அவர்களது கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்தும் அறிந்து கொள்ள இயலும் என்று கூறியுள்ளார் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் ஒருவரான பி.என். டன். 

ஜம்மு காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்த மத்திய அரசின் உத்தரவு வரும் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP