பிரேசில்: தொடர் கனமழையில் 9 பேர் உயிரிழப்பு ?

பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
 | 

பிரேசில்: தொடர் கனமழையில் 9 பேர் உயிரிழப்பு ?

பிரேசில் நாட்டின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. 

ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த செவ்வாய்கிழமை முதல் தொடர் கனமழை பெய்துவருகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளிலும் 2 அடிக்கு மேல், தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளன.  பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP