ஆஸ்திரேலியாவின் 6 அடி உயர அதிசய பசு !

ஆஸ்திரேலியாவின் மையலுப் என்னுமிடத்தில் அடிமாடாக வந்த மாடு மிக உயரமாக இருப்பதைக் கண்டவர்கள் அதைக் கொல்லாமல் உரிமையாளருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டனர். 7 வயதுடைய இந்தப் பசு ஆறேகால் அடி உயரம் கொண்டது.
 | 

ஆஸ்திரேலியாவின் 6 அடி உயர அதிசய பசு !

ஆஸ்திரேலியாவில் அடிமாடாக அனுப்பப்பட்ட ஆறரை அடி உயர பசுமாடு மீட்கப்பட்டு மீண்டும் பண்ணையில் வளர்க்கப்பட்டு வருகிறது. 

ஆஸ்திரேலியாவின் மையலுப் என்னுமிடத்தில் அடிமாடாக வந்த மாடு மிக உயரமாக இருப்பதைக் கண்டவர்கள் அதைக் கொல்லாமல் உரிமையாளருக்கே திருப்பிக் கொடுத்துவிட்டனர்.7 வயதுடைய இந்தப் பசு ஆறேகால் அடி உயரமும் ஆயிரத்து நானூறு கிலோ எடையும் கொண்டது. இது ஆஸ்திரேலியாவிலேயே மிக உயரமான பெரிய பசுமாடாகக் கருதப்படுகிறது. மீண்டும் உரிமையாளரின் பண்ணையில் விடப்பட்டுள்ள அந்தப் பசுவுக்கு அருகில் உள்ள மற்ற மாடுகள் நிற்கும்போது கன்றுகளைப்போல் உள்ளது. அதனருகில் கன்றுகள் இருக்கும்போது ஆட்டுக்குட்டிப்போல் உள்ளதாக ஆஸ்திரேலிய வாழ்மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த பெரிய பசுவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பசுவை பார்க்கும்போது சிலருக்கு ஆச்சர்யமாகவும், சிலருக்கு பயமாகவும் இருப்பதாக சமூக வலைதளங்களில்  நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த பசு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வாய்ப்பிருப்பதாக பண்ணை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP