அர்ஜெண்டினா: மாயமான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

அட்லாண்டிக் கடலில் கடல் மட்டத்தில் இருந்து 900 அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பலை ஓஷன் இன்பினிட்டி என்ற தனியார் நிறுவனம் கண்டுபிடித்ததாக அர்ஜெண்டினா கடற்படையின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அர்ஜெண்டினா: மாயமான நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு

அட்லாண்டிக் கடலில் கடந்த ஆண்டு 44 பேருடன் மாயமான அர்ஜெண்டினா கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ஆம் தேதி வழக்கமான ரோந்துப் பணிக்காக சென்ற ஏ.ஆர்.ஏ. சான் ஜுவான் என்ற நீர் மூழ்கிக் கப்பல் அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. நீர்முழ்கிக் கப்பலின் பேட்டரி அமைப்பில் தண்ணீர் புகுந்ததால் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அர்ஜெண்டினா மட்டுமன்றி பல்வேறு நாடுகளும் தேடும் பணியை மேற்கொண்டன. இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து 900 அடி ஆழத்தில் நீர்மூழ்கிக் கப்பலை ஓஷன் இன்பினிட்டி என்ற தனியார் நிறுவனம் கண்டுபிடித்ததாக அர்ஜெண்டினா கடற்படையின் டிவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP