Logo

ஆண்டுதோறும் அமெரிக்க குடியுரிமை பெறும் 60 ஆயிரம் இந்தியர்கள்

ஆண்டுதோறும் அமெரிக்க குடியுரிமை பெறும் 60 ஆயிரம் இந்தியர்கள்
 | 

ஆண்டுதோறும் அமெரிக்க குடியுரிமை பெறும் 60 ஆயிரம் இந்தியர்கள்

ஆண்டுதோறும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் அந்நாட்டு நிரந்தர குடியுரிமை பெறுவதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

பனி காரணமாகவும், வியாபாரம் உள்ளிட்ட பல காரணங்களால் அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. கடந்த, 2017ம் ஆண்டு மட்டும் 2 லட்சத்திற்கும் மேலான இந்தியர்கள் அமெரிக்கா சென்று வந்துள்ளனர். 

இதற்கிடையே, மெக்ஸிகோ, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளுக்கு அடுத்தபடியாக, இந்தியர்கள், அமெரிக்காவில் அதிக அளவில் குடியேறி வருகின்றனர். கிரீன் கார்டு எனப்படும் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை சராசரியாக ஆண்டுக்கு 60 ஆயிரம் என்ற எண்ணிக்கையை எட்டிள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

2017ம் ஆண்டு மட்டும், 63 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவில் கிறீன் கார்டு பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP