தேவாலயத்தில் பாதிரியார் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை !

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள ஒரு தேவாலயத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த பாதிரியார் உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 | 

தேவாலயத்தில் பாதிரியார் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை !

ஆப்பிரிக்க நாட்டில் உள்ள ஒரு தேவாலயத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த பாதிரியார் உள்பட 6 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர். 

ஆப்ரிக்காவின் சான்மட்டேங்கா மாகாணத்தின் டாப்லோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர். அப்போது சுமார் 30 பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் தேவாலயத்துக்குள் நுழைந்து, பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை சுட்டுத் தள்ளினர். இதில் பாதிரியார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  இச்சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP