பாகிஸ்தானில் முன்னாள் நீதிபதியின் பெயரில் 2,224 கார்கள் பதிவு

பாகிஸ்தானில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் சிக்கந்தர் ஹயாத்.பஞ்சாப் மாகாண வரிகள் துறையில் இருந்து வந்த ரசீதில், அவரது பெயரில் 2224 கார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து நீதிபதி அதிர்ச்சியடைந்தார்
 | 

பாகிஸ்தானில் முன்னாள் நீதிபதியின் பெயரில் 2,224 கார்கள் பதிவு

பாகிஸ்தானில் தனது பெயரில் 2 ஆயிரத்து 224 கார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிந்து முன்னாள் நீதிபதி அதிர்ச்சியில் உறைந்துள்ளார். 

பாகிஸ்தானில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் சிக்கந்தர் ஹயாத். 82 வயதான இவருக்கு, பஞ்சாப் மாகாண வரிகள் துறையில் இருந்து ரசீது வந்துள்ளது. அந்த ரசீதில் அவருக்கு தொடர்பில்லாக கார்களுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதை அடுத்து வரிகள் துறையை அணுகிய போது, அவரது பெயரில் 2 ஆயிரத்து 224 கார் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகக் கூறியதால் ஹயாத் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக பஞ்சாப் வரிகள் துறை செயலர் மற்றும் இயக்குனர் ஒரு வாரத்தில் விளக்கம் தர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP