உண்மையின் பக்கமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு - இரா.சம்பந்தன்

உண்மையின் பக்கமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு - இரா.சம்பந்தன்
 | 

உண்மையின் பக்கமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு - இரா.சம்பந்தன்


சர்ச்சைக்குரிய மத்திய வங்கி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மீது, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இரா.சம்பந்தன் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 2015, 2016ம் ஆண்டுகளில் மத்திய வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடி குறித்த விசாரணை அறிக்கை ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. அதில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் பெர்ப்பச்சுவல் நிறுவனத்தின் அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிஹேன மற்றும் பொறுப்புக் கூறவேண்டிய அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

 இது குறித்து எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், "கூட்டமைப்பு எப்போதும் உண்மையின் பக்கமே நிற்கும். அதேநேரம் கடந்த காலங்களில் இடம்பெற்ற பொதுசொத்துக்கள் துஷ்பிரயோகம், ஊழல் மோசடிகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP