இலங்கையில் 8 -ஆவது முறையாக குண்டுவெடித்தது: மக்கள் அச்சம்

இலங்கையில் 8-ஆவது முறையாக குண்டுவெடித்துள்ளது. கொழும்பு தெமடகொட பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 | 

இலங்கையில் 8 -ஆவது  முறையாக குண்டுவெடித்தது: மக்கள் அச்சம்

இலங்கையில் 8-ஆவது முறையாக குண்டுவெடித்துள்ளது. கொழும்பு தெமடகொட பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏற்கனவே 7 இடங்களில் குண்டுவெடித்ததில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீண்டும் குண்டு வெடித்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

தொடர் குண்டுவெடிப்பு சம்வங்களை அடுத்து, இலங்கையில் அவசரநிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க, மாலை 4 மணி முதல் சமூக வலைதளங்களை முடக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. வழிபாட்டு தலங்கள், மத தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP