முன்னாள் போராளிகள் விடுவிப்பு!

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் விடுவிப்பு
 | 

முன்னாள் போராளிகள் விடுவிப்பு!


வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த மூன்று முன்னாள் போராளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் இறுதிப் போர் முடிவுற்ற பின், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போராளிகள் ராணுவத்திடம் சரணடைந்தனர். நூற்றுக்கணக்கான போராளிகளை ராணுவம் கைது செய்தது. மேலும் ராணுவத்தின் அறிவிப்பை ஏற்று, போராளிகளை அவர்களது குடும்பத்தினரே ராணுவத்திடம் சரணடைய வைத்தனர்.

புனர்வாழ்வு பெறாது இருக்கும் முன்னாள் போராளிகளை இனங்கண்டு ராணுவம் கைது செய்யும் நடவடிக்கையும் தொடர்கின்றது. இதில் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட போராளிகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக அவர்களின் பெற்றோர்கள் குற்றம் சுமத்தி, கடந்த 8 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ரகசிய முகாம்களில் தமது பிள்ளைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். 

12000 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைத்துளளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் புனர்வாழ்வு தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.


இந்நிலையில், வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்றுவந்த, யாழ்பாணத்தைச் சேர்ந்த மார்க்கண்டு நேவிநாதன், கிளிநொச்சியை சேர்ந்த ஆறுமுகம் அருள்பிரகாஷ் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த பெர்னாண்டோ எமில்தாஸ் ஆகிய மூன்று முன்னாள் போராளிகளும் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP