இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு

இலங்கையில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 4 பயங்கரவாதிகள் உட்பட15 பேர் உயிரிழந்துள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 | 

இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: 15 பேர் உயிரிழப்பு

இலங்கையில் நேற்றிரவு நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

இலங்கையில் கடந்த 21ம் தேதி அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து இலங்கையின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ராணுவப்படையினர் மற்றும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கல்முனை  பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அதிரடிப்படையினர் வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின் போது வீட்டில் இருந்த வெடிகுண்டு வெடித்ததில் 4 பயங்கரவாதிகள் உட்பட 15 பேர் உயிரிழந்ததாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP