Logo

15000 குடும்பங்கள் இன்னும் முகாம்களில் வாழும் நிலை!

15000 குடும்பங்கள் இன்னும் முகாம்களில் வாழும் நிலை!
 | 

15000 குடும்பங்கள் இன்னும் முகாம்களில் வாழும் நிலை!


இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 15000 குடும்பங்களுக்கு வாழ்வதற்கு நிலம் இல்லை என யாழ். மாவட்ட அரச அதிகாரி நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலங்களில் மக்களின் பெருமளவிலான நிலங்கள் இலங்கையின் முப்படைகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின் ராணுவத்திடம் இருந்து விடுவிக்கப்படும் நிலங்களில் மக்கள் மீள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனால் ராணுவத்தினர் மக்களின் நிலங்களில் இருந்து முழுமையாக வெளியேறாத காரணத்தினால், தற்போதும் முகாம்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த நாகலிங்கம் வேதநாயகன், "கடந்த 7 ஆண்டுகளாக வட பகுதியைச் சேர்ந்த 15000 குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு நிலம் இல்லாததால் மீள் குடியமர்த்துவதற்கு முடியவில்லை. மேலும் கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த கந்தையா மற்றும் ராசையா சரஸ்வதி ஆகியோரின் நினைவாக அவர்களின் குடும்பத்தினரால் அன்பளிப்பு செய்யப்பட்ட நிலங்களில் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. ஒரு வீட்டுக்கு 9 லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP