Logo

மோசமாகும் வெப்ப சலனம்: ஜப்பானில் 65 பேர் பலி, 22 ஆயிரம் பேர் பாதிப்பு 

ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் அனல் காற்றின் தீவிரம் காரணமாக 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்த வெயிளின் தாக்கத்தை தேசிய பேரழிவாக அந்நாட்டு அறிவித்துள்ளது.
 | 

மோசமாகும் வெப்ப சலனம்: ஜப்பானில் 65 பேர் பலி, 22 ஆயிரம் பேர் பாதிப்பு 

ஜப்பானில் ஏற்பட்டுள்ள கடும் வெப்பம் மற்றும் அனல் காற்றின் தீவிரம் காரணமாக 65 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இந்த வெயிளின் தாக்கத்தை தேசிய பேரழிவாக அந்நாட்டு அறிவித்துள்ளது. 

இதுவரை இல்லாத அளவு வெப்பம் அதிகாம உள்ளதால், பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தில் ஏற்பட்டுள்ள அனல் காரணமாக, 22,647க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலான்மை குழு தெரிவித்துள்ளது

"வெப்பம் அதிகமாக உள்ளதால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான நிவாரண உதவிகள் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது" என்று ஜப்பான் அரசு செய்தித்தொடர்பாளர் யோஷிஹிதே சுகா தெரிவித்துள்ளார்

கடந்த வாரம், வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல், ஆறு வயது பள்ளி சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, அனைத்து பள்ளிகளிலும் குளிர்சாதன பெட்டிகள் அமைக்க தேவையான நிதி வழங்குவதாக அரசு உறுதி அளித்துள்ளது. மேலும், பள்ளி குழந்தைகளுக்கான வெயில் கால விடுமுறை நாட்கள் நீட்டிக்க உள்ளதாக யோஷிஹிதே தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை அன்று டோக்கியோ குமாகயா நகரில், 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. சாலைகளை குளிர்ச்சியாக வைக்க, 'உசிமிசு' என்ற திட்டத்தின் மூலம் டோக்கியோ நகர சாலைகளில், தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

இன்னும் 2 மாதம் வரை ஜப்பானின் பல பகுதிகள் 35 டிகிரிக்கும் அதிகமான வெப்ப நிலையை கொண்டிருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆண்டு தோறும் அதிகமான வெயிலும், மழையும் ஜப்பானை  தாக்குகின்றன. ஜப்பானில் உள்ள அதிக வெப்ப நிலையினால், நூற்றுக்கணக்கில் உயிரிழக்கின்றனர். அதை போல, கடந்த ஜூன் மாதம் பெய்த கன மழையால், 220 பேர் உயிரிழந்த்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP