Logo

சுனாமி தாக்கிய இடத்தில் எரிமலை சீற்றம்: இந்தோனேசியாவில் மீண்டும் எச்சரிக்கை 

நிலநடுக்கம், சுனாமியால் சின்னாபின்னமான இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சாம்பலைக் கக்கத் தொடங்கியதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
 | 

சுனாமி தாக்கிய இடத்தில் எரிமலை சீற்றம்: இந்தோனேசியாவில் மீண்டும் எச்சரிக்கை 

நிலநடுக்கம், சுனாமியால் சின்னாபின்னமான இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் எரிமலை வெடித்து சாம்பலைக் கக்கத் தொடங்கியதால் பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள மவுண்ட் சோபூடன் எரிமலை இன்று காலை வெடித்து சிதறி சாம்பலைக் கக்கத் தொடங்கி உள்ளது. கடும் சீற்றத்துடன் காணப்படும் இந்த எரிமலை எந்த நேரத்திலும் நெருப்புக் குழம்பு வெளிவரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 6000 மீட்டர் உயரத்திற்கு தற்போது எரிமலையில் இருந்து வெளிவரும் புகையானது பரவி வருகிறது. இதனால் வானெங்கும் கரும்புகை சூழ்ந்துள்ளது. 

பொதுமக்கள் யாரும் எரிமலை அருகில் செல்ல வேண்டாம் என்றும், சாம்பல் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முகமூடிகள் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சாம்பல் விமான என்ஜின்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் வான் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

எனினும் எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றுவது தொடர்பான உத்தரவுகள் எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. 

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த 29-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை சுனாமி தாக்கியது. இதனால் அந்த நகரம் கிட்டத்தட்ட அழிந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு இருந்த பெரும்பாலான வீடுகள், கட்டி டங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரைமட்டமானது. வீடுகள் இன்றி தவிக்கும் மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழப்பு 1400ஆக உள்ளது.

ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் 
இடத்தில் உள்ளன. இதனால் இங்கு அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்தோனேசியாவில் மட்டும் கிட்டத்தட்ட 120 எரிமலைகள் உள்ளன. இவை அவ்வப்போது வெடிக்கும் வாய்ப்பு உடையவை. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP