Logo

மழை போய் வெயில் வந்தது... ஜப்பானில் அனல் காற்றுக்கு14 பேர் பலி!

ஜப்பானில் வீசி வரும் மோசமான அனல்காற்று மற்றும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 2 ஆயிரம் பேர் கோர வெயில் பதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

ஜப்பானில் கடந்த 2 வாரத்தில் சுமார் 1050 மி.மீ அளவுக்கு மழை பதிவானது. அந்நாட்டு வரலாற்றில் இதுதான் மிகவும் அதிகபட்ச மழையளவு. இந்த மழை வெள்ளத்தில் சிக்கி 230 பேர் பலியாகினர்.  400 பேர் காணாமல் போயினர். சொந்த இடங்களில் இருந்து மொத்தம் 20 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர். வெள்ளம் மற்றும் மண் சரிவால் பாதிக்கப்பட்ட பல இடங்களில் இன்னும் மீட்பு பணியே முடியவே இல்லை. 

இந்த நிலையில் அங்கு கடந்த சில நாட்களாக அனல் காற்று வீசி வருகிறது. வெயில் மற்றும் அனல் காற்றின் அளவும் வெப்பம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போவது மக்களை பெரிய அளவில் பாதிகிறது. ஜப்பானில் சரசாரியாக 34 டிகிரி செல்ஸியஸ் அதிகபட்ச வெப்பாமாக இருக்கும். ஆனால் கடந்த 4 நாட்களாக 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் பதிவாகிறது. 

இந்த வெயில் காரணமாக இதுவரை 2000க்கும் அதிகமானோர் நீர்ச்சத்து குறைபாட்டால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேலும் 3 நாட்களில் 14 பேர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP