அமெரிக்க டிரோன் தாக்குதலில் பாக் தலிபான் தலைவன் பலி

அமெரிக்க ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில், பாகிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா ஃபஸ்லுல்லா கொல்லப்பட்டுள்ளதாக ஆஃப்கான் அரசு தெரிவித்துள்ளது.
 | 

அமெரிக்க டிரோன் தாக்குதலில் பாக் தலிபான் தலைவன் பலி

அமெரிக்க ராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில், பாகிஸ்தானின் தலிபான் தலைவர் முல்லா ஃபஸ்லுல்லா கொல்லப்பட்டுள்ளதாக ஆஃப்கான் அரசு தெரிவித்துள்ளது. 

அஃப்கானிஸ்தானின் குனார் பகுதியில், அமெரிக்க ராணுவம் இன்று அதிரடி டிரோன் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் தலிபான் தீவிரவாத அமைப்பின் பாகிஸ்தான் தலைவர் முல்லா ஃபஸ்லுல்லா உள்ளிட்ட 3 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஆஃப்கான் அரசு தெரிவித்துள்ளது. "குனார் பகுதியில் உள்ள மரவேரா மாவட்டத்தில், அமெரிக்க ராணுவம் மற்றும் ஆஃப்கான் ராணுவம் சேர்ந்த நடத்திய டிரோன் தாக்குதலில், பாகிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா ஃபஸ்லுல்லா கொல்லப்பட்டுள்ளதை நான் உறுதி செய்கிறேன்" என்றார் ஆஃப்கான் பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் ரட்மனிஷ்.

ஆஃப்கானில் அதிரடி தாக்குதல் நடத்தியதை உறுதி செய்த அமெரிக்க ராணுவம், அதில் யாரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கவில்லை. 

கடந்த 2013ம் ஆண்டு, தெரிக்-ஈ -தலிபான் என அழைக்கப்படும் பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவரானார் ஃபஸ்லுல்லா.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP