Logo

அலுவலகத்தில் வைத்து மேயர் சுட்டுக் கொலை: பிலிப்பைன்ஸில் பயங்கரம்!

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள ரோண்டா நகரின் மேயர், அவரது அலுவலகத்தில் வைத்து சிலர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மத்திய பிலிப்பைன்ஸ் பகுதியை சேர்ந்த ரோண்டா நகர மேயர் மரியானோ பியான்கோ III, அந்நாட்டில் உள்ள போதைப்பொருள் கும்பல்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களை கடுமையாக தண்டிக்க பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே நடவடிக்கை எடுத்து வந்தார். அதில் சில கடத்தல் கும்பல்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு அதிகாரிகள் பட்டியலிடப் பட்டர்கள். அந்த பட்டியலில் பியான்கோவின் பெயரும் இடம் பெற்றிருந்தது. 

இந்நிலையில், நேற்று தனது அலுவலகத்தில் உறங்கிக் கொண்டிருந்த பியான்கோ, சில மர்ம நபர்களால் சரமாரியாக சுடப்பட்டார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அதிகாலை 2.25 மணியளவில் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடந்த வருடம், ரோண்டா நகர போலீஸ் அதிகாரிகளை இயக்கும் அதிகாரம் பியான்கோவிடம் இருந்து பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அரசு அதிகாரிகள் கொல்லப்படுவது பிலிப்பைன்ஸில் புதிதல்ல. அதிபர் டுடெர்டேவின் இரும்புக்கர ஆட்சியில் கூலிப்படையினரால் கொல்லப்படும் 16வது அரசு அதிகாரி பியான்கோ ஆவார். இந்த சம்பவம் அங்கு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP