பிலிப்பைன்ஸை அடுத்து சீனாவையும் புரட்டிபோட்ட மங்குட்!- 24 லட்சம் பேர் வெளியேற்றம் (வீடியோ)

பிலிப்பைன்ஸை புரட்டிப்போட்டு 64 பேரை பலி கொண்ட மங்குட் புயல் ஹாங்காங்கை அசைத்து பார்த்தா பின் சீனாவை தாக்கி வருகிறது. புயல் காரணமாக சீனாவில் இருந்து 24 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
 | 

பிலிப்பைன்ஸை அடுத்து சீனாவையும் புரட்டிபோட்ட மங்குட்!- 24 லட்சம் பேர் வெளியேற்றம் (வீடியோ)

பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்டு 64 பேரை பலி கொண்ட மங்குட்  புயல் ஹாங்காங்கை அசைத்து பார்த்தா பின் சீனாவை தாக்கி வருகிறது. புயல் காரணமாக சீனாவில் இருந்து 24 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.  இதனிடையே மிக அதி தீவிர புயல் எச்சரிக்கையை சீன வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. 

பிலிப்பைன்ஸ் நாட்டின் பக்காயோ என்ற இடத்தில், மங்குட் புயல் மணிக்கு 305 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்றுடன் வீசி அநேக பொருட்களை தூக்கி வீசி துவம்சம் செய்தது. இதனால் பிலிப்பைன்ஸ் நாட்டின் பல முக்கிய நகரங்கள் சின்னாபின்னமானது. மங்குட் புயல் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 64 பேரை எட்டியுள்ளது. நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் தொடர்வதால் மீட்பு நடவடிக்கை சிரமமாக உள்ளது. புயல் காரணமாக பிலிப்பைன்சில் கடல்வழி மற்றும் விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரங்களை இழந்து முடங்கியுள்ளனர். 

இந்த நிலையில் இந்தப் புயல் நேற்று ஹாங்காங்கையும் தாக்கி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. கிழக்கு ஆசியாவிலிருந்து மணிக்கு 200 கிலோமீட்டரில் வந்த இந்தப் புயலால் கவ்லூன் பகுதியில், மிக உயரமான கட்டுமானத்தின் ஒரு பகுதி சாய்ந்து விழுந்தது. அங்குள்ள விக்டோரியா துறைமுகத்தில் கடல்சீற்றம் காணப்பட்டது. கடல் அலைகளின் உக்கிரத்தை தாங்க முடியாத ஏராளமான படகுகள் மற்றும் சிறு கப்பல்கள், காற்றில் வீசப்பட்டு தூசி போல பறந்தன. 

அதோடு சீனாவுக்கு நகர்ந்த இந்தப் புயல் தனது ஆக்ரோஷத்தை இழக்காமல் அதே வீரியத்தோடு காணப்படுகிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தை தாக்கிய மங்க்குட் ஜியங்மென் நகரத்தில் மணிக்கு 162 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது.  

இதனால் அந்த நகரம் நீரில் தத்தளித்து வருகிறது. இதனால் அங்கு 24 லட்சம் மக்கள், இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது வீசி வரும் இந்தப் புயல் நாளை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலும் கடல்சீற்றம் மற்றும் கன மழை நீடித்து வருகிறது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP