ஆப்கான் ராணுவத்தின் மசூதி மீது தாக்குதல்: 27 வீரர்கள் பலி 

ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ராணுவ முகாமுக்குள் உள்ள மசூதியை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் 27 வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.
 | 

ஆப்கான் ராணுவத்தின் மசூதி மீது தாக்குதல்: 27 வீரர்கள் பலி 

ஆப்கானிஸ்தானின் ராணுவ முகாமில் உள்ள மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். 

ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் ராணுவ முகாம் உள்ளது. அங்கு ராணுவ முகாமுக்குள் உள்ள மசூதியை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தத்  தாக்குதலில் மசூதியில் இருந்த 27 படைவீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

இது குறித்து தகவலறிந்ததும் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.  படுகாயம் அடைந்தவர்களை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP