Logo

ஆப்கானில் 150 பேருந்து பயணிகள் கடத்தல்: அமெரிக்காவுக்கு வைக்கப்படும் மிரட்டலா?

ஆப்கானிஸ்தானில் பேருந்தை சிறைபிடித்து அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உள்பட 150 பேரை தாலிபான் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக சிறை பிடித்துள்ளனர்.
 | 

ஆப்கானில் 150 பேருந்து பயணிகள் கடத்தல்: அமெரிக்காவுக்கு வைக்கப்படும் மிரட்டலா?

ஆப்கானிஸ்தானில் பேருந்தை சிறைபிடித்து அதில் பயணித்த பெண்கள், குழந்தைகள் உள்பட 150 பேரை தாலிபான் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக கடத்தி சென்றுள்ளனர். தீவிரவாதிகளை எதிர்த்து ஆப்கான் படைகள் சண்டையிட்டு வருகின்றன. 

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுடன் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி அரசு ஈத் பண்டிகையையொட்டி சில நிபந்தனைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் 3 பேருந்துகளை தாலிபான் தீவிரவாதிகள் சிறைப்பிடித்தனர். அதில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 150 பேரை கடத்தி பிணைக் கைதிகளாக அறிவித்து அழைத்து சென்றுள்ளனர். 

அங்குள்ள கான் அபாத் என்ற சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது கடத்தல் சம்பவம் அரங்கேறியது. ஆயுதமுனையில் பேருந்தில் இருந்த பயணிகளை இறங்க செய்த தீவிரவாதிகளை கட்டாயப்படுத்தி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

பேருந்து பயணிகள் பெரும்பாலும் குண்டூஸின் படாக்ஷன் மற்றும் தக்வார் பகுதியை சேர்ந்தவர்கள் தெரியவந்துள்ளது. 3 பேருந்துகளும் காபூல் நோக்கி சென்றுகொண்டிருந்ததாக ஆப்கான் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பிணைக் கைதிகள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

பின்னர் ஆப்கான் ராணுவத்தினர் தாலிபான் முகாம்கள் மீது நடத்திய தீவிர சண்டையை அடுத்து திங்கள்கிழமை காலை நிலவரப்படி 21 கைதிகளைத் தயவிற மற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.  இதனைத் தொடர்ந்து இருத் தரப்புக்கும் இடையே சண்டை தொடர்ந்து வருகிறது. இதில் 7 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

ஆப்கானில் 17 வருட காலமாக நடந்து வரும் போர் முடிவுக்கு வரவேண்டும் என்றால் அமெரிக்கா நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என தாலிபான் தீவிரவாத தலைவர் மவுலவி ஹைபதுல்லா சமீபத்தில் கூறியிருந்தார்.  இந்த நிலையில் தீவிரவாதிகள் பிணை கைதிகளாக பொதுமக்களை பிடித்து சென்றுள்ளது அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP