Logo

ஆப்கான் தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் பலி - துணை அதிபரை கொல்ல சதி? 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் 60 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 | 

வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு துபாயிலிருந்து ஆப்கானிஸ்தான் திரும்பிய ஆப்கான் துணை அதிபர் அப்துல் ரசித் டோஸ்டம் காபூல் விமான நிலையம் திரும்ப இருந்தபோது அவரை வரவேற்க பலர் காத்திருந்த வேளையில் இந்த குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் அருகே திடீரென பலத்த சத்தத்துடன் குண்டுகள் வெடித்தன. இதில் 14 பேர் பலியானதாகவும், தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. படுகாயமுற்ற 60-க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். 

பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. துணை அதிபரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உயிர் காக்கும் உடை அணிந்திருந்த துணை அதிபர் டொஸ்டும் தனது வாகனத்தில் ஏறித் தன் இருப்பிடம் சென்றதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 

விமான நிலையத்துக்குள் நடந்து வந்து புந்தே தற்கொலைக் குண்டு தாரி தனது குண்டை வெடிக்கச் செய்துள்ளார் என்பதை காட்சிகளை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP